ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட எழுவர் நாட்டை வந்தடைந்தனர்!
#SriLanka
#Gulf
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 07 பேர் நேற்று இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் நிலமைகளின்போது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்தமைக்காக அந்நாட்டின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
23 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் நாடு திரும்பியதைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து இவர்களிடம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே