பிறந்த திகதி 05 (5,14,23) அன்று பிறந்தவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகம்? பலன்கள் உள்ளே

#Astrology #people #Lanka4 #Numerology #number five #L4
Prasu
2 months ago
பிறந்த திகதி 05 (5,14,23) அன்று பிறந்தவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகம்? பலன்கள் உள்ளே

ஒரு ஜாதகத்தை கணிப்பதென்றால் கூட திதி, வாரம், யோகம், கரணம், நட்சத்திரம் பார்க்க பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. பஞ்ச என்பது 5 ஐ குறிக்கும். 

மனித வாழ்க்கை ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களுக்குள் அடங்கியுள்ளது. அது மட்டுமின்றி தமிழ் இலக்கியங்களில் ஐம்பால்களான ஆண்பால், பெண் பால், பலர் பால், பலவின்பால், ஒன்றன் பால் போன்றவை ஐந்து வகையாகத்தான் அமைந்துள்ளன.

ஐந்து என்ற எண்ணும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ள சிறப்பான எண்ணாகும். 5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 5ம் எண்ணின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளார்கள். 

ஐந்தாம் எண்ணுக்குரிய கிரகம் புதன் பகவானாவார். ஐந்தாம் எண்ணிற்குரிய ஆங்கில எழுத்துக்கள் E,H,N,Xஆகும். குண அமைப்பு ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிலும் பிறர் உதவியின்றி தனித்து செயல்பட முடியாது.

எதையும் வெகு எளிதில் கிரகித்து கொள்வார்கள். பின்னால் நடக்கப் போவதைக்கூட முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

இவர்களின் பேச்சில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். மற்றவர்களுக்கு துன்பம் நேர்ந்தால் மனதிற்குள் சந்தோஷப்படுவார்கள். எதையும் அவசர அவசரமாக செய்து முடிப்பார்கள்.

அறிவும் சாமர்த்தியம் அதிகம் இருந்தாலும் ஆழ் மனதில் ஏதோ ஒரு பயமும், சந்தேகமும் குடி கொண்டிருக்கும். இவரது பேச்சுத் திறமை பிறரை ரசிக்கும்படி வைக்கும்.

அனுபவமும் அறிவாற்றலும் நிறைய உடையவர்கள் என்றாலும், தங்களுடைய குண அமைப்புகளை நேரத்திற்கேற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள்.

முடிந்தவரை கடினமான பணிகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் இவர்களுக்கு உண்டாவதுண்டு. உடலமைப்பும், ஆரோக்கியமும் ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், அழகான முக அமைப்பும் கொண்டிருப்பார்கள்.

தலைவலி, உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சரியான ஓய்வு இல்லாமல் தூக்கமின்மை, முதுகு வலி, கை, கால் வலி, உடல் வலி போன்றவை உண்டாகும்.

குடும்ப வாழ்க்கை 

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை என்பது திருப்தி அளிப்பதாகவே இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடும்பமாக இருந்தாலும் வரக்கூடிய வாழ்க்கையை அனுசரித்து நடப்பவராக இருப்பார்.

சிறுசிறு பிரச்சினைகளால் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இவர்கள் சுகமாக வாழ்க்கை வாழ்வதையே விரும்புவார்கள்.

பொருளாதாரம் 

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு போது மென்கிற அளவிற்கு பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக இருக்கும். பகட்டான செல்வாக்கு நிறைந்த வாழ்க்கை அமையும். 

ஓய்வு நேரங்களிலும் உடலுழைக்காமல் மூளையை பயன்படுத்தி ஏதோ, ஒரு வழியில் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆதலால் பணவரவுகள் திருப்திகரமாகவே இருக்கும்.

தொழில் 

ஐந்தாம் எண் அறிவு சம்பந்தமான எண் என்பதால் அறிவுப் பூர்வமான பணிகளும், எதையும் புதிதாக கண்டு பிடிப்பதில் ஆர்வமும் அதிகமிருக்கும். 

ஜோதிடம், வானவியல், காண்ட்ராக்ட் தொழில், எழுத்து துறை, பத்திரிகை, புத்தகம் வெளியிடுதல் போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கிட்டும். கலைத்துறை, இசைத்துறையிலும் உயர்வு ஏற்படும். உடல் உழைப்பு இவர்களால் முடியாத காரியமாகும். 

1 மற்றும் 6ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். 2ம் எண்ணைத் தவிர மற்ற எண்ணில் பிறந்தவர்களும் நட்பாகவே அமைவார்கள். 

புதனுக்குரிய காலம் ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் 21 ம் தேதி முதல் ஜுன் மாதம் 22ம் தேதி வரையிலும், ஆகஸ்டு மாதம் 23ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரையிலான காலமும் புதனுக்குரியது. 

பரிகாரம் 

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானை வழிபடுதல் நல்லது. புதனுக்கு பரிகாரம் செய்வதும் உத்தமம். 

அதிர்ஷ்டம் தருபவை 

  • அதிர்ஷ்ட தேதி - 5,14,23,6,15,24 
  • அதிர்ஷ்ட நிறம் - சாம்பல், வெளிர் நீலம், வெளிர் பச்சை 
  • அதிர்ஷ்ட திசை - வடக்கு 
  • அதிர்ஷ்ட கல் - வைரம், மரகதப் பச்சை 
  • அதிர்ஷ்ட தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4