குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் - அமைச்சர் உறுதி!

#SriLanka #Health #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa
Thamilini
1 month ago
குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் - அமைச்சர் உறுதி!

குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் பணிக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்கவும், அடுத்த ஜனவரியில் வழங்கப்படவுள்ள சம்பள உயர்வை அளிக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

 நிர்வாக குடும்ப சுகாதார சேவை அதிகாரி பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 275 அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரம் ஒரு நிலையான நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருவதாகவும், மக்கள் மீது கூடுதல் சுமையைச் சுமத்தாமல் பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். 

அத்துடன் உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டுக்கான உலக சுகாதார மாநாட்டில் இலங்கையின் இலவச சுகாதார சேவைக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், அந்த அங்கீகாரத்தின் பெரும்பகுதிக்கு குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் அர்ப்பணிப்பே காரணம் என்றும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4