இலங்கையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் 70 சதவீதத்தால் குறைந்துள்ளது!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa
Thamilini
3 hours ago
இலங்கையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் 70 சதவீதத்தால் குறைந்துள்ளது!

தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சுமார் 70 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பூச்சிக்கொல்லிகளின் பாவனை படிப்படியாக தடை செய்யப்பட்டதன் விளைவாக இந்த மாற்றம் வந்துள்ளதாக அவர் கூறினார்.

"பூச்சிக்கொல்லிகள் மூலம் தற்கொலைகளைத் தடுத்தல்" எனும் தலைப்பிலான விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 1 1990ஆம் ஆண்டு முதல் அதிவிஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தற்கொலைகளைத் தடுக்கும் தேசிய உத்திகளில் பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவதை அனைத்து நாடுகளும் கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!