அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு!! தீவிர விசாரணை!
அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சிறைத் துறை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 45 வயதான கைதி ஒருவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ அதிகாரியின் ஆலோசனையின் பேரில் அங்குனகொலபெலஸ்ஸ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், கைதியின் மரணத்திற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே அங்குனகொலபெலஸ்ஸ சிறையின் ஒரு வார்டில் கைதிகளிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சிறை ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எட்டு கைதிகள், முதற்கட்ட சிகிச்சைக்காக அங்குனகொலபெலஸ்ஸ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைதியின் மரணம் வைரஸ் காய்ச்சலுடன் தொடர்புடையதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அதே நேரத்தில் சுகாதார அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
(வீடியோ இங்கே )