இளம் டிக்டாக் நட்சத்திரத்தை கொலை செய்த பாகிஸ்தான் நபருக்கு மரண தண்டனை
கடந்த ஆண்டு, ஒரு இளம் சமூக ஊடகப் பிரபலம் தனது நட்பை நிராகரித்ததால், அவரை அவரது வீட்டிற்கு வெளியே கொலை செய்த நபருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
17 வயதான சனா யூசுஃபின் கொலையைத் தொடர்ந்து ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட உமர் ஹயாத்துக்கான இந்தத் தீர்ப்பை இஸ்லாமாபாத் நீதிபதி முஹம்மது அஃப்சல் மஜோகா அறிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே யூசுஃப் வசித்த தெருவிலிருந்து ஹயாத் வெளியேறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், டிக்டாக்கில் உள்ளடக்கங்களை உருவாக்கும் 22 வயதான ஹயாத்தை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்து கைது செய்தனர்.
சனா யூசுஃபிற்கு பாகிஸ்தானில் பரந்த பின்தொடர்பாளர்கள் இருந்தனர். அவரது மரணத்திற்குப் பிறகு, நாட்டின் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான டிக்டாக்கில், லட்சக்கணக்கான பயனர்கள் அவரது கணக்கைப் பின்தொடரத் தொடங்கினர்.
(வீடியோ இங்கே )