IPL M64 - லக்னோ அணியை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்

#Lanka4 #IPL #T20 #Cricket #Rajasthan #Lucknow
Prasu
3 hours ago
IPL M64 - லக்னோ அணியை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரின் 64வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.

லக்னோ சார்பில், மிட்செல் மார்ஷ் 96 ஓட்டங்களும் ஜோஸ் இங்கிலிஸ் 60 ஓட்டங்களும் அடித்தனர்.

இந்நிலையில், 221 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பில், அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 43 ஓட்டங்களும் துருவ் ஜுரேல் 53 ஓட்டங்களும் சூர்யவன்ஷி 93 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!