காவல்துறையை விரிவாக்க 10000 பேரை புதிதாக சேர்க்க நடவடிக்கை!!
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின்போது அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், காவல்துறை சேவையை ஒரு தொழில்முறை மற்றும் உயர்தரமான நிறுவனமாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அவர் விளக்கினார்.
அதன்படி, காவல் நிலையங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக கணிசமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறை சேவையில் உள்ள ஆள் பற்றாக்குறைக்குத் தீர்வாக, 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )