சீரற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஆபத்து: இலங்கையர்களில் 5 இல் ஒருவருக்கு தொற்றா நோய்

#SriLanka #Lanka4 #Eat #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
சீரற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஆபத்து: இலங்கையர்களில் 5 இல் ஒருவருக்கு தொற்றா நோய்

இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர் (20 சதவீதமானோர்) நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற ஏதேனும் ஒரு தொற்றா நோயினால்பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் நளின்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் பதிவாகும் மரணங்களில் கணிசமானவை இவ்வாறான தொற்றா நோய்கள் காரணமாகவே ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் மக்களின் மாறிவரும் வாழ்வியல் முறைகளே இதற்கு முதன்மைக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அதீத மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகளால் நடுத்தர வயதுடையவர்கள் மாத்திரமன்றி, இளைஞர்களும் சிறுவர்களும்கூட இந்நோய்களுக்கு ஆளாகி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இலவச சுகாதார சேவை வழங்கப்பட்டு வரும் பின்னணியில், தொற்றா நோய்களுக்கான மருந்து மாத்திரைகளைத் தொடர்ச்சியாக இறக்குமதி செய்வதற்கும், அதற்கான மருத்துவ வசதிகளைப் பராமரிப்பதற்கும் அரசாங்கத்திற்கு மாதாந்தம் பெருமளவிலான நிதி சுமை ஏற்படுவதாக அமைச்சர் விவரித்தார்.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குக் பொதுமக்கள் தங்களின் அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனி, உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளைக் தவிர்த்து, உள்ளூர் மரக்கறிகள் மற்றும் பழவகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், நாளாந்தம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமே இந்த ஆபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனச் சுகாதார அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!