எரிபொருள் கையிருப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்!

#SriLanka #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
எரிபொருள் கையிருப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்!

ஆகஸ்ட் மாதம் வரை நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் அளவும் கோரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொதுச் சேவையின் சீரான செயல்பாட்டைப் பேணுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம், இன்று (15) பிரதமர் தலைமையில் கூடியது. 

இதன்போது  எதிர்காலத்தில் எரிபொருள் மானியங்கள் வழங்குவதற்கான வாய்ப்புகள், இதுவரை எரிபொருள் வழங்கப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒற்றை மற்றும் இரட்டை எண் முறையை நீக்குதல், கியூஆர் குறியீட்டின் கீழ் எரிபொருள் வழங்குதல் மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தல் ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர், மற்ற நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு ஏற்பட்ட போதிலும், தனது அரசாங்கங்கள் இந்த நெருக்கடியை முறையாகக் கையாண்டுள்ளன என்று அவர் வலியுறுத்தினார். 

 இந்த நெருக்கடி இன்னும் முடிவடையாததால், நாம் தொடர்ந்து இதற்குக் கவனம் செலுத்த வேண்டும். நிலையான எரிசக்தி மேலாண்மை மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

வெசாக் வாரத்தில் தேவைக்கேற்ப மின்சாரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் இதன்போது எடுத்துரைத்துள்ளார். 


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!