இலங்கையில் விண்ணைத் தொடும் கட்டுமானப் பொருட்களின் விலை - நடுத்தர வர்க்கத்தினர் திணறல்.
இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரச் சூழலில், சொந்த வீடு என்பது நடுத்தர மற்றும் வறிய மக்களிடத்தில் ஒரு எட்டாக்கனியாக மாறி வருவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடந்த காலங்களில் பன்மடங்கு அதிகரித்துள்ளமை, ஒரு சிறிய வீட்டைக் கட்டி முடிப்பதைக் கூட சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் (Luxury Apartments) கட்டப்பட்டாலும், அவை உயர் வருமானம் ஈட்டுபவர்களையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் இலக்கு வைத்தே அமைகின்றன. வங்கிக் கடன் வட்டி வீதங்கள் அதிகரிப்பு மற்றும் நகரப் பகுதிகளில் நிலத்தின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருவது, சாமானிய மக்களை வாடகை வீடுகளிலேயே முடக்கி வைத்துள்ளது.
அரசினால் முன்னெடுக்கப்படும் குறைந்த வருமானம் பெறுவோருக்கான வீடமைப்புத் திட்டங்கள் மந்த கதியில் உள்ளதால், வீடற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இலங்கையின் வீடமைப்புத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தச் சமநிலையற்ற தன்மை காரணமாக, எதிர்காலத்தில் பாரிய சமூகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )