வவுனியாவில் 19 வயது இளம் பெண்ணை காணவில்லை
#SriLanka
#Vavuniya
#Police
#Lanka4
#Girl
#Missing
#family
Prasu
11 hours ago
வவுனியாவை வசிப்பிடமாகக் கொண்ட 19 வயது சு. திவ்யா என்ற இளம் பெண் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த இளம் பெண் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது.
இதுதொடர்பாகக் குடும்பத்தினரால் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளம் பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0773828845, 0762827019 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )