ஹேமரதன தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முடியாது: அனுராதபுரம் நீதவான் அதிரடி உத்தரவு!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Remand
Abi
20 hours ago
ஹேமரதன தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முடியாது: அனுராதபுரம் நீதவான் அதிரடி உத்தரவு!

15 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், விளக்கமறியலில் உள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை மீண்டும் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சிசித்த விக்ரமரத்ன மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (12) அனுராதபுரம் பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நீதவான் பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டி உத்தரவைப் பிறப்பிக்க மறுத்தார்: கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சந்தேக நபர் ஏற்கனவே விளக்கமறியலில் உள்ளார். 

ஆனால், அந்த உத்தரவு தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் இதுவரை அனுராதபுரம் நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை. விளக்கமறியலில் உள்ள ஒருவரை மீண்டும் அதே தண்டனைக்கு உட்படுத்துவதாக இருந்தால், சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறு முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதவான் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!