கட்டுநாயக்கவில் 4 கோடி ரூபா போதைப்பொருள் வேட்டை - இந்திய தொழிலதிபர் சிக்கினார்!

#SriLanka #drugs #Lanka4 #Bussinessman #Indian #Katunayaka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
22 hours ago
கட்டுநாயக்கவில் 4 கோடி ரூபா போதைப்பொருள் வேட்டை - இந்திய தொழிலதிபர் சிக்கினார்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து இன்று அதிகாலை 12:30 மணிக்கு Thai Airways (TG-307) விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த 29 வயதுடைய இந்திய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னிடம் வரி செலுத்த வேண்டிய பொருட்கள் எதுவுமில்லை எனக் கூறி, விமான நிலையத்தின் 'Green Channel' ஊடாக வெளியேற முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரை வழிமறித்தனர். 

அவரது இரண்டு பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 389 கிராம் எடையுள்ள உயர்தர 'குஷ்' (Kush) போதைப்பொருள் கண்டறியப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 4 கோடியே 38 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதான இந்தியப் பிரஜை மற்றும் போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!