பாடசாலைக்குள் புகுந்து சக மாணவர்கள் மீது தாக்குதல்: எப்பாவலையில் பரபரப்பு!
#SriLanka
#School
#Student
#Attack
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
20 hours ago
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்குதலை நடத்திய மாணவருக்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
பழிவாங்கும் நோக்கில் விஞ்ஞானப் பிரிவில் பயிலும் மாணவர் ஒருவர், தொழில்நுட்பப் பிரிவில் பயிலும் சக மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தடுக்கச் சென்ற மேலும் நான்கு மாணவர்களும் இதன்போது காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதத்துடன் சந்தேக நபரான மாணவனை எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )