கனேடிய பிரதமரின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சில கனடியர்கள் இந்த ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுப் படிவங்களை நிரப்ப மறுத்து வருகின்றனர்.
சிலர் தமது படிவ உறைகளில் "அனுப்புநருக்கே திருப்பி அனுப்புக" (Return to Sender) என எழுதி திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர், லிபரல் கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவிய கட்சித் தாவல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
நான் ஒரு சிறுபான்மை அரசாங்கத்திற்கே வாக்களித்தேன், பெரும்பான்மை அரசாங்கத்திற்கு அல்ல. அரசாங்கத்தால் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன் என ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த நினா குமுடோரோஸ் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சில கனடியர்கள் தமது மதிப்பீட்டு அட்டைகளை எரிக்கும் மற்றும் கிழிக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )