தெற்கு மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை - 60 இற்கும் மேற்பட்டோர் கைது!

#SriLanka #Police #Investigation #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
தெற்கு மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை - 60 இற்கும் மேற்பட்டோர் கைது!

தெற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், 60 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 இணையவழிக் குற்றங்கள் மற்றும் குடிவரவு விதிமீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மிடிகம, ஹிக்கடுவ மற்றும் காலி ஆகிய இடங்களில் திங்கட்கிழமை (11) நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

மிடிகமவில், பின்வத்த பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 28 இந்தியர்கள் மற்றும் ஐந்து நேபாள நாட்டினர் உட்பட 33 வெளிநாட்டினர் இவ்வாறாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் விசா காலம் முடிந்தும் தங்கியிருத்தல், சுற்றுலா விசாக்களை வைத்திருக்கும்போது பணியில் ஈடுபடுதல், வரி விலக்கு பெற்ற சிகரெட்டுகளை வைத்திருத்தல் மற்றும் கணினி குற்றச் சட்டம் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!