தமிழக முதலமைச்சர் விஜய்யை போல கிளிநொச்சியில் இருக்கும் மதுபானசாலைகளை மூடுவாரா சிறீதரன்?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பிற கட்சிகளுடன் கூட்டாட்சி நடத்தி தற்போது தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, முதலமைச்சராகத் தெரிவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சிறீதரன் எம்.பி கடந்த வாரம் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சராக பதயேற்ற பிறகு விஜய் அவர்கள் தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கியுள்ள சிறீதரன் எம்.பி, விஜய்யின் கொள்கையை பின்பற்றி கிளிநொச்சியில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு அழுத்தம் கொடுப்பாரா என்று கேள்வி எழும்பியுள்ளது.
அல்லது சிறீதரன் எம்.பி மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், குறிப்பிட்ட சில மதுபானசாலைகளுக்கு உரிமம் வழங்க அவர் சிபாரிசு கடிதம் பெற்று கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைக்கு சிறீதரன் எம்.பி குரல் கொடுத்த உண்மையை நிலைநாட்டுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
(வீடியோ இங்கே )