நாளை சகல கிளினிக்குகளும் வழமை போல் இயங்கும் - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்.

#SriLanka #Jaffna #Hospital #Director #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நாளை சகல கிளினிக்குகளும் வழமை போல் இயங்கும் - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, நாளை (11.05.2026) முதல் வைத்தியசாலையின் சகல கிளினிக்குகளும் (Clinics) மற்றும் மருத்துவ சேவைகளும் வழமை போன்று நடைபெறும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக மருந்துத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது.

இருப்பினும், சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ், கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் தேவையான மருந்துகள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலதிக கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சத்தியமூர்த்தி, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மருந்துகளுக்கு மேலதிகமாக, இன்னும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் நோயாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி நாளை முதல் தமது கிளினிக் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தர முடியும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!