நயினாதீவு நாக பூசணி அம்மன் உண்டியல் உடைப்பு - மூவர் கைது !
இரு சிறுவர்களின் உதவியுடன் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் நேற்றையதினம் (06/07) புதன்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் நேற்று காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரிதமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் , நேற்றுகாலை இருவரை குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியிலும் , மற்றும் ஒருவர் நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து உண்டியல் காசு 21 இலட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் 16 , 17மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
(வீடியோ இங்கே )