காங்கிரஸுடன் கூட்டணி - கடிதத்தை ஆளுநரிடம் கையளித்தார் விஜய்!
#SriLanka
#Tamil Nadu
#Vijay
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
த.வெ.க. தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான கடிதத்தை கையளித்துள்ளார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தமிழக பொறுப்பு ஆளுநரை அர்லேகரை சந்தித்தார். இதன்போது விஜய்க்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்குமார், சி.டி.ஆர்.நிர்மல்குமார், வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.
ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே