கல்விப் பணியில் சிகரம் தொடும் ஆளுமை கலகெதர திரு .உனைஸ் ஆரிப்.....
நிர்வாகம் என்பது அதிகாரம் அல்ல; அது அர்ப்பணிப்புடன் கூடிய சேவை" , கல்விப்புலத்தில் தடம் பதித்து வரும் திரு. உனைஸ் ஆரிப் அவர்கள், மத்திய மாகாணத்தின் நிர்வாகத்துக்கான பிரதி கல்விப் பணிப்பாளராக (Deputy Director of Education - Administration) உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
"கல்வித்துறை என்பது ஒரு தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் களம்." அந்தக் களத்தில் நீண்டகால அனுபவமும், கூர்மையான நிருவாகத் திறனும் கொண்ட திரு. உனைஸ் ஆரிப் அவர்கள், மத்திய மாகாணக் கல்வித்துறைக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் பலமாகும்.
ஆசிரியராகவும், அதிபராகவும் தனது பணியை ஆரம்பித்த இவர், கிழக்கு மாகாணத்தின் திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியதோடு, உலக வங்கி மற்றும் UNICEF அமைப்புகளின் கல்வி ஒருங்கிணைப்பாளராகவும் சர்வதேசத் தரத்திலான அனுபவத்தைப் பெற்றவர்.
வத்தேகம கல்வி வலயத்தில் கணித, விஞ்ஞானப் பாடங்களுக்கான பிரதி கல்விப் பணிப்பாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. சிக்கலான நிர்வாகப் பிரச்சினைகளை மிக எளிமையாகவும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் கையாள்வதோடு நேரகாலம் பாராது கல்விச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இவர்,சக உத்தியோகத்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
மத்திய மாகாணத்தின் கல்வி நிருவாகத்துக்கான கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பாரிய பொறுப்பை சுமக்கும் இவர் பல தசாப்தங்களாகக் கல்வித்துறையின் பல்வேறு படிநிலைகளில் ஆற்றிய பணிகள், இன்று அவரை ஒரு முதிர்ந்த நிருவாகியாக வார்த்தெடுத்துள்ளன.
மத்திய மாகாணம் போன்ற பல்லினங்கள் வாழும் ஒரு பிராந்தியத்தில், சிறுபான்மைச் சமூகத்திலிருந்து இத்தகைய ஒரு உயர் நிருவாகப் பொறுப்பிற்குத் திரு. உனைஸ் ஆரிப் அவர்கள் தெரிவாகி இருப்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இனி வரும் காலங்களில் மத்திய மாகாணத்தின் கல்வி நிர்வாகத்தில் ஒரு பொற்காலத்தை உருவாக்கட்டும்.
சிறந்ததொரு ஆளுமையின் கீழ் எமது கல்விச் சமூகம் புதிய பரிமாணங்களை தொட எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!"
(வீடியோ இங்கே )