பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம்

#prices #people #Fuel #Lanka4 #Warning #England #L4
Prasu
1 month ago
பிரித்தானியாவில் எரிபொருள் விலை உயரும் அபாயம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயரும் என பிரித்தானியாவின் RAC அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் மொத்த எரிபொருள் விலைகள் லிட்டருக்கு சுமார் 5 பென்ஸ் உயர்ந்துள்ளன. 

இந்த விலை உயர்வால் ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான காருக்கு எரிபொருள் நிரப்பும் செலவு £3.30 பவுண்ஸ் ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை 157 பென்ஸாகவும், டீசல் விலை 188 பென்ஸாகவும் பதிவாகியுள்ளது.

இதற்கமைய வரும் வாரங்களில் எண்ணெய் மற்றும் மொத்த எரிபொருள் விலைகள் மேலும் உயரும் எனவும், இது தவிர்க்க முடியாததது என்றும் RAC அமைப்பு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4