நீதித்துறையில் தலையிடுகிறாரா ஜனாதிபதி? சட்டதரணிகள் சங்கம் அதிருப்தி!

#SriLanka #Law #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
நீதித்துறையில் தலையிடுகிறாரா ஜனாதிபதி? சட்டதரணிகள் சங்கம் அதிருப்தி!

மே தினப் பேரணியில் நீதித்துறை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து சட்டதரணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இலங்கை சட்டத்தரிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அதனை வெளிப்படுத்தியுள்ளது. 

குறித்த அறிக்கையில், தீர்ப்பு வழங்கப்படும்போது மக்கள் அதைக் கொண்டாட முடியும் என்று ஜனாதிபதி கூறியிருப்பதானது, நீதித்துறைச் செயல்பாட்டில் தலையிடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதாகவும், அத்தகைய உரைகள் நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நீதித்துறையின் சுதந்திரத்தையும் நேர்மையையும் உறுதி செய்வதில் சட்டத்தரிகள் சங்கம் உறுதியாக உள்ளது என்றும், அதைப் பாதுகாக்கவும் பேணவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் கூறியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4