மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

நாவலப்பிட்டி - கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (05) காலை 7.00 மணியளவில் விபத்துக்குள்ளானது. நாவலப்பிட்டி, திஸ்பனே சந்தி பகுதியில் வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் காயமடைந்த 13 பாடசாலை மாணவர்கள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாவலப்பிட்டி திஸ்பனே சந்தி பகுதியில் இன்று காலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4