10 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தி மீட்பு: சாரதி கைது!

#SriLanka #Jaffna #Arrest #Lanka4 #Driver #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
10 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தி மீட்பு: சாரதி கைது!

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அனுமதியின்றி முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் இன்று (05) காலை மறித்துச் சோதனையிட்டனர்.

சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மீசாலைப் பகுதியில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

பாரவூர்தியில் கடத்தி வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டன. பொலிஸாரைக் கண்டதும் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோடிய சாரதி, பின்னர் பொலிஸாரால் தேடிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் மீசாலையில் வைத்து கைப்பற்றியுள்ளனர். 

தப்பியோட முயன்ற சாரதி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4