கடந்த 24 மணிநேரத்தில் உச்சக்கட்ட தாக்குதல் - கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!
#SriLanka
#America
#War
#Iran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் சுமார் 6 சதவீதம் உயர்ந்துள்ளன.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து பதிவான மிகவும் கடுமையான மோதல் சூழல் இது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 6.3 சதவீதம் அதிகரித்து, $114.96 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெயின் விலை 4.2 சதவீதம் அதிகரித்து, $106.17 ஆக உயர்ந்துள்ளது.