மன்னாரில் கொடூரம் - கணவனை கொலை செய்து கழிவறையில் வீசிய மனைவி!

#SriLanka #Mannar #Police #Investigation #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மன்னாரில் கொடூரம் - கணவனை கொலை செய்து கழிவறையில் வீசிய மனைவி!

கணவனை கொலை செய்து உடலை துண்டுத் துண்டாக வெட்டி கழிவறையில் வீசப்பட்ட சம்பவம் மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மன்னார், வங்காலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மன்னார் மூர் வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனைத் தாக்கிக் கொலை செய்துள்ளார். 

 பின்னர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சடலத்தைத் துண்டு துண்டுகளாக வெட்டி, உறைப்பையில் பொதி செய்து வீட்டின் மலசலகூடக் குழியினுள் போட்டு மறைத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பத்துடன் தொடர்புடைய பெண்  மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4