தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : வெற்றிவாகை சூடப்போவது யார்?

#SriLanka #Election #TamilNadu President #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் : வெற்றிவாகை சூடப்போவது யார்?

தமிழக சட்மன்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த தேர்தலில் 4.88 கோடிபேர் வாக்களித்துள்ளனர். இம்முறை 85.10 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருந்தது. 

இந்நிலையில்  வாக்கு எண்ணும் நடவடிக்கை இன்றும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 64 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளதுடன், மின்னணு வாக்குப் பெட்டிகள்  பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 

காலை 08.00 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 11.00 மணி முதல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக    15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்ப பணிகளில் ஈடுபடுவர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4