ராஜகிரியவில் திடீர் சோதனை - 120 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

#SriLanka #Arrest #Fraud #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
ராஜகிரியவில் திடீர் சோதனை - 120 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

ராஜகிரிய மெட வெலிக்கடை வீதியிலுள்ள இடமொன்றில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 120 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கையின்போது, ​​அவர்களின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏராளமான மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் உள்ளிட்ட கணிசமான அளவு உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

அவை மேலதிக தடயவியல் பகுப்பாய்விற்காக தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் பல தளங்களை வாடகைக்கு எடுத்து, இந்தக் குழுவினர் இந்த அதிநவீன மோசடித் தொழிலை நடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4