பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் நடந்து கொள்ளவும் குடிமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான எம்.ஐ.5, கூட்டுப் பயங்கரவாத பகுப்பாய்வு மையம் தேசிய அச்சுறுத்தல் அளவை “கணிசமான” நிலையிலிருந்து “கடுமையான” நிலைக்கு உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது இரண்டாவது மிக உயர்ந்த பாதுகாப்பு நிலையாகும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதை இது குறிக்கிறது.
(வீடியோ இங்கே )