போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி அளிப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!
நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முறையாகக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி பகுதியில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் பேசிய அவர், சில குழுக்களின் ஆதரவு மற்றும் செல்வாக்கின் காரணமாக, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் நீண்ட காலமாகத் தடையின்றி நடைபெற்று வந்தது.
இருப்பினும், அதிகாரிகள் தற்போது நிலைமையை முறையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதால், அத்தகைய நிலைமைகள் இனி நிலவாது. நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் முயற்சிகளில் முப்படைகளும், குறிப்பாக கடற்படையும் தற்போது முக்கியப் பங்காற்றி வருவதாகக் கூறினார்.
தேவையான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு, பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கைது செய்யப்படும் என்றும், இந்த நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுபவர்கள் மற்றும் நிதியுதவி அளிப்பவர்கள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )