திறைசேரி பண மோசடி விவகாரத்தில் நந்தலால் வீரசிங்க பற்றி ஏன் யாரும் பேசவில்லை : விமல் கேள்வி!!

#SriLanka #Wimal Weerawansa #treasure #nandalal weerasinghe #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
திறைசேரி பண மோசடி விவகாரத்தில் நந்தலால் வீரசிங்க பற்றி ஏன் யாரும் பேசவில்லை : விமல் கேள்வி!!

 நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரித்து நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் தீர்ப்பினை முன்கூட்டியதாகவே குறிப்பிடுகிறார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா என  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட திறைசேரியின் மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளார். அது தற்கொலை என்று தற்போது குறிப்பிடப்படுகிறது. 

 இந்த அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்கள் தான் பலியாகிறார்கள். அமைச்சரவை எடுத்த தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்கள் தான் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். 

ஆனால் தீர்மானம் எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இந்த மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பற்றி ஆளும் தரப்பும் பேசுவதில்லை. எதிர்க்கட்சியும் பேசுவதில்லை.

 ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார நிபுணரான ஹர்ஷ டி சில்வாவும் இதைப்பற்றி பேசுவதில்லை. கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்களை செலுத்தும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வசமே காணப்பட்டது. 

இந்த காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன் தான் அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு கட்டம் கட்டமாக 7 கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன” என்றார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!