அமெரிக்க முற்றுகையால் எண்ணெய் வருவாயில் 48 லட்சம் டாலர் இழப்பை சந்தித்துள்ள ஈரான்

#America #Dollar #Oil #Iran #economy #lanka4news #Hormuz
Prasu
1 month ago
அமெரிக்க முற்றுகையால் எண்ணெய் வருவாயில் 48 லட்சம் டாலர் இழப்பை சந்தித்துள்ள ஈரான்

53 மில்லியன் ஈரானிய கச்சா எண்ணெ பேரல்களை ஏற்றிச் செல்லும் முப்பத்தொரு எண்ணெய்க் கப்பல்கள் ஓமான் வளைகுடாவில் நங்கூரமிடிப்பட்டுள்ளது. 

மேலும், ஏப்ரல் 13 அன்று அமெரிக்கக் கடற்படை முற்றுகை தொடங்கியதிலிருந்து, டெஹ்ரான் 4.8 பில்லியன் டாலர் எண்ணெய் வருவாயை இழந்துள்ளதாக பென்டகன் தற்போது மதிப்பிட்டுள்ளது.

இது ஏறக்குறைய மூன்று வாரங்களாக நீடிக்கும் பொருளாதார முடக்கம் என்றும் இது மேலும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓமான் வளைகுடாவில் அமெரிக்காவின் தடுப்பு நடவடிக்கையை எதிர்கொள்ளும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக சில ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் ஏற்கெனவே அதிக செலவு பிடிக்கும் மாற்று வழிகளைக் கண்டறிந்துள்ளன. 

மேலும் சில கப்பல்கள், மலாக்கா ஜலசந்தியை அடைவதற்கு முன்பு, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் கடற்கரைகளை ஒட்டி நீண்ட, அதிக செலவு பிடிக்கும் பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4