வெற்றியை உயிரிழந்த ரசிகர்களுக்கு அர்ப்பணித்த டெல்லி அணி

#Death #Accident #Delhi #Lanka4 #IPL #Cricket #condolence #L4
Prasu
1 month ago
வெற்றியை உயிரிழந்த ரசிகர்களுக்கு அர்ப்பணித்த டெல்லி அணி

19வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 43வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில், டெல்லி அணி 3 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டியின் இறுதியில் பேசிய டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல், எங்கள் ரசிகர்களுக்கு துயரச் சம்பவம் ஏற்பட்டது. 

அவர்களின் இழப்பிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன், அவர்கள் எங்கள் டெல்லி அணி குடும்பத்தின் இரண்டு உறுப்பினர்கள் என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 27 அன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சாலை விபத்தில் 20 வயது யக்யா பாட்டியா மற்றும் 14 வயது அபவ் பாட்டியா ஆகியோர் உயிரிழந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4