வெளிநாட்டில் பிள்ளைகள் - தனிமையில் விபரீத முடிவெடுத்த தாய்!

#SriLanka #Jaffna #Police #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
வெளிநாட்டில் பிள்ளைகள் - தனிமையில் விபரீத முடிவெடுத்த தாய்!

பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் தனிமையில் வசித்து வந்த தாய் ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

யாழ்ப்பாணம் - அராலி தெற்கு பகுதியில் வசித்து வந்த 79 வயதான தாய் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை, களுவத்துறை பகுதியைச் சேர்ந்த  கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அப் பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

 இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்தவேளை, தீயில் கருகிய நிலையில் அவர் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 சடலத்துக்கு அருகாமையில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் காணப்பட்டதுடன், அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டு காணப்பட்டுள்ளது.

 அத்துடன் வீட்டில் இருந்து கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதில், 'எனது சாவிற்கு நான் தான் காரணம். வருத்தத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

 இச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார்,தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4