பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட பின் நித்திரைக்கு சென்ற குடும்பம் மர்மமாக உயிரிழப்பு..

#SriLanka #Biryani #Lanka4 #family #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பிரியாணி மற்றும் தர்பூசணி சாப்பிட்ட பின் நித்திரைக்கு சென்ற குடும்பம் மர்மமாக உயிரிழப்பு..

மும்பையின் பைதோனி பகுதியைச் சேர்ந்த 40 வயது வர்த்தகர் ஒருவர் , அவரது மனைவி மற்றும் மகள்கள் ஆகிய நால்வரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இரவு இவர்கள் உறவினர்களுடன் இணைந்து பிரியாணி விருந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் தர்பூசணி பழத்தை உட்கொண்டுள்ளனர்.

அதிகாலை 5 மணியளவில் குடும்பத்தினர் அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அனைவரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உணவு நச்சுத்தன்மை காரணமாக இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி பழத்தின் எஞ்சிய பகுதிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதில் ஏதேனும் நச்சு கலந்திருக்கலாமா அல்லது பாக்டீரியா தொற்றுகள் காரணமா என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4