மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை திடீர் உயர்வு!

#Lanka4 #Ship #World #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #Middle East
Abi
1 month ago
மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பனாமா கால்வாய் வழியாக பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை திடீர் உயர்வு!

ஈரான் மீதான போர் காரணமாக, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் வழியாக கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 300 கூடுதல் கப்பல்கள் கடந்து சென்றுள்ளதாக பனாமா கால்வாய் அதிகார சபையின் நிதித் தலைவர் தெரிவித்துள்ளார்.

"மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை சீராகும் வரை இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று விக்டர் வியல் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் கடற்கரையோரம் உள்ள நீர்வழியினைத் தவிர்ப்பதற்காக வேறு நாடுகளுக்கு திருப்பி விடப்பட்ட அல்லது வேறு நாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்கள் இப்போது பனாமா கால்வாய் வழியாகப் பயணிக்கின்றன.

இந்தக் கால்வாயைக் கடப்பதற்கான சராசரி கட்டணம் ஒரு கப்பலுக்கு 300,000 டொலர் முதல் 400,000 டொலர் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், கடைசி நிமிடத்தில் கால்வாயைக் கடப்பதற்கான அனுமதியை உறுதி செய்ய சில கப்பல்கள் கூடுதலாக 425,000 டொலர் வரை கட்டணம் செலுத்துவதாக அசோசியேட்டட் பிரஸ் இந்த வார தொடக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4