வரி வசூலிப்பை வலுப்படுத்த ஜனாதிபதி அதிரடி உத்தரவு: உள்நாட்டு இறைவரி அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு!

#SriLanka #Meeting #Lanka4 #President #AnuraKumaraDissanayake #Official #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
வரி வசூலிப்பை வலுப்படுத்த ஜனாதிபதி அதிரடி உத்தரவு: உள்நாட்டு இறைவரி அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுதல் உள்ளிட்ட திணைக்களத்தின் திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்தும் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இதன் போது மீளாய்வு செய்யப்பட்டது.

அந்த இலக்குகளை அடைந்துகொள்வதற்காக நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தேசிய e-invoicing முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதற்கான சட்ட ரீதியான ஏற்பாடுகள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

இந்த முழுமையான திட்டத்தையும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினேன்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!