உலக அமைதி வேண்டி பௌத்த துறவிகளின் எழுச்சிப் பயணம்: இன்று சுதந்திர சதுக்கத்தில் நிறைவு பெறுகிறது.

#SriLanka #Independence #LANKA4 #Peace #World #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
உலக அமைதி வேண்டி பௌத்த துறவிகளின் எழுச்சிப் பயணம்: இன்று சுதந்திர சதுக்கத்தில் நிறைவு பெறுகிறது.

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "ஏஹி பஸ்ஸிகோ" சர்வதேச அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இன்று நண்பகல் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் இருந்து ஆரம்பமாகும் இந்த அமைதி நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

மாலை 4 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் விசேட அரச நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இதன்போது, ஜனாதிபதியினால் பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட குழுவினரிடம் ஸ்ரீ மஹா போதியின் அடியொற்றிய அரச மரக்கன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

நிகழ்வைத் தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி தம்புள்ளையில் இருந்து ஆரம்பமான இந்த "ஏஹி பஸ்ஸிகோ" சர்வதேச அமைதி நடைபயணம், நேற்றைய தினம் யக்கலையில் இருந்து களனி ரஜமகா விகாரையை வந்தடைந்திருந்தது.

இந்த நடைபயணம் காரணமாக இன்று கொழும்பின் சில வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தில் இருந்து பேஸ்லைன் ஊடாக பொரளை சந்தி வரையிலான வீதி. கங்காராம விகாரையைச் சுற்றியுள்ள வீதிகள்.

இன்று முற்பகல் 11 மணி முதல் நடைபயணம் செல்லும் நேரத்தைப் பொறுத்து, அவ்வப்போது இந்த வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. எனவே, சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!