'சமாதானத்திற்கான நடைபயணம்” விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறை

#SriLanka #Colombo #Road #Traffic
Soruban
1 month ago
'சமாதானத்திற்கான நடைபயணம்” விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறை

கொழும்பில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள 'சமாதானத்திற்கான நடைபயணம்” நிகழ்வினால் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த நிகழ்வு, இன்று மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, பொரளை நகர் மற்றும் அதனை அண்மித்த வீதிகள், தேசிய நூலக வீதி ஊடாக கங்காராம விஹாரை வரையான பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணி முதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, கொழும்பு நகர் மற்றும் நடைபயணம் முன்னெடுக்கப்படும் பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4