நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்.

#SriLanka #Department #Country #Meteorology #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம்.

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (27) பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை இன்று மதியம் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானிலை நிலவரத்தின் அடிப்படையில்,16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 09 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4