நாட்டின் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்துக: பாராளுமன்றத்தில் சுரேன் ராகவன் வலியுறுத்தல்.

#SriLanka #Parliament #Country #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
நாட்டின் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்துக: பாராளுமன்றத்தில் சுரேன் ராகவன் வலியுறுத்தல்.

அவுஸ்திரேலியாவுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பில் சுதந்திரமானதும், கட்சி சார்பற்றதுமான விசாரணையை நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.ஜனாதிபதி நேரடியாக தலையீடு செய்து, குறித்த விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஓய்வுப் பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதே சிறப்பானது எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலை அரசாங்கத்திடமிருந்து கோரிநிற்பதாகவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தற்காலிக இடைநீக்கம் செய்யாது, முழுமையாக பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பொறுப்புக்கூற வேண்டியவர்களின் தனிப்பட்ட பணத்திலிருந்து, இழக்கப்பட்ட நிதியை மீள வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிதி அமைச்சர் பதவிலியிருந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விலகி, அதனை பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் சமர்பித்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். 

இந்த நிலையில், திறைசேரியும் முழுமையாக ஊடுருவப்பட்டால், முதலீடு செய்வதற்கு எவரும் முன்வர மாட்டார்கள் என்றும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4