பூநகரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

#SriLanka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
பூநகரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவமானது நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இயன்முகிலன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் இரவு பலமணி நேரம் ஆகியும் இளைஞனை காணவில்லை என தாய் மற்றும் தந்தை இணைந்து தேடியுள்ளனர். எனினும் தமது மகன் நண்பர்களுடன் எங்காவது சென்றிருப்பான் என்ற எண்ணத்தில் அவர்கள் உறக்கத்திற்கு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் இன்று காலை குறித்த இளைஞனின் தந்தை மாடு கட்டுவதற்காக சென்ற நிலையில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் உயிரிழந்திருப்பதை அவதானித்ததாக தெரியவருகின்றது.

இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

இச் சம்பவம் குறித்து ஜெயபுரம் பொலிஸாருக்கு உடனடியாக ஊரவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையிலும் தாமதமாகவே பொலிஸார் அங்கு சென்றதாகவும், தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!