யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!
#SriLanka
#Jaffna
Soruban
1 month ago
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் அகழ்வுப்பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து இன்று(27) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 240 மனித என்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
அவற்றுள் 239 மனித என்பு கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு, செப்டெம்பர் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெற்றிருந்தது.
இந்தநிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் சுமார் 08 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே