தகுதியற்றவர்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கி குறி வைப்பது இந்த நாட்டின் சட்டத்தையும் நீதியையும்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா அவர்கள், பெண் ஒருவருக்கு முன்னால் தனது துப்பாக்கியைக் காண்பித்து, தான் ஒரு வீரன் என்பதை நிரூபிக்க முயன்ற சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் அனைத்து குற்றச் செயல்களுக்கு மேலும் அதிகரிக்கும்முகமாகவும், இலங்கை சட்டம் என்னவென தெரியும் ஒரு சட்டத்தரணியாகவும்விருக்கும் சட்டத்தரணியான கௌசல்யா எனப்படும் அரைகுறை சட்டத்தரணியையும் தண்டிக்க சட்டத்துக்கு காவற்துறைக்கு திராணி உள்ளதா?
ஒரு நாட்டின் அரசாங்கம் என்பது தனது குடிமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கும் அரணாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் நடப்பவை இதற்கு நேர்மாறாக அமைந்துள்ளனவா என்ற கேள்வி தற்போது மேலெழுந்துள்ளது.
அண்மையில் சர்ச்சைக்குரிய நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள், "இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையில் பகுத்தறிவு இருக்கிறதா?" என எண்ணத்தோன்றுகிறது.
ஆயுதம் என்பது ஒரு தற்காப்பு கருவி என்பதைத் தாண்டி, அது ஒரு பொறுப்பு. ஒருவருக்கு துப்பாக்கி அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், அவரது மனநிலை, கடந்த கால செயற்பாடுகள் மற்றும் சமூகத்தில் அவர் நடந்து கொள்ளும் விதம் ஆகியவை தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.
ஆனால், பொதுமக்கள் மத்தியில் "சமநிலையற்றவர்" என விமர்சிக்கப்படும் நபர்களுக்கு அரசாங்கமே ஆயுதத்தை தாரைவார்ப்பது என்பது, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதற்கு சமமானதாகும்.
மேற்கத்தைய நாடுகளில் ஒருவருக்கு ஆயுத உரிமம் வழங்குவதற்கு முன்னர், மிகக் கடுமையான Risk Assessment (அபாய மதிப்பீடு) செய்யப்படுகிறது.
அவரது கிரிமினல் பின்னணி என்ன? அவர் வன்முறையில் ஈடுபடும் குணம் கொண்டவரா?மன ரீதியாக அவர் நிலையானவரா? போன்ற பல கட்ட ஆய்வுகளுக்குப் பின்னரே அனுமதி வழங்கப்படும்.
ஆனால், இலங்கையில் Hôtel Greengrass ல் இரு இளைஞர்கள் மண்டையை உடைத்தது முதல் கட்டிய மனைவியை ரோட்டில் வைத்து அடித்த பல வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய, நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்களுக்குக் கூட சிவப்பு கம்பளம் விரித்து துப்பாக்கி வழங்கப்படுவது எவ்வகையான நிர்வாக நடைமுறை? இது நிர்வாகத்தின் அறியாமையா அல்லது தெரிந்தே செய்யும் முட்டாள்தனமா?
இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால பலவீனம் என்பது, ஒரு அசம்பாவிதம் நடந்து உயிர்ச்சேதம் ஏற்பட்ட பின்னரே விழித்துக்கொள்வதாகும். அர்ச்சுனா போன்ற நபர்களின் கடந்த காலச் செயல்களைப் பார்க்கும்போது, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பொதுமக்களுக்கோ அல்லது சமூக அமைதிக்கோ அச்சுறுத்தலாக மாறலாம் என்பது நிதர்சனம்.
அவ்வாறு ஒரு விபரீதம் நிகழ்ந்த பின் "அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்கிறோம்" என்று சொல்வதில் என்ன பயன் இருக்கிறது? "வருமுன் காப்பதே அறிவுடைமை.
ஆனால், வந்த பின் வருந்துவதே எம் நாட்டு நிர்வாகத்தின் வாடிக்கையாகிவிட்டது." பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிர்வாகத்துறை, யாருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது.
ஒரு சாதாரண குடிமகன் தனது பாதுகாப்பிற்காக ஒரு சிறு கோரிக்கையை முன்வைத்தால் ஆயிரம் சட்டங்களைப் பேசும் அதிகாரிகள், அதிகார பலமும் பணபலமும் கொண்ட "மெண்டல்" பிம்பங்களுக்கு ஆயுதம் வழங்கும்போது மௌனம் காப்பது ஏன்? இந்த பகுத்தறிவற்ற செயல்பாடு ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையையுமே கேலிக்குரியதாக்குகிறது.
ஆயுதம் என்பது அதிகாரத்தைக் காட்டவோ, பிறரை அச்சுறுத்தவோ பயன்படுத்தப்படும் விளையாட்டுப் பொருளல்ல. அடிப்படை அறிவு கூட இல்லாமல், வன்முறைப் பின்னணி கொண்டவர்களிடம் துப்பாக்கியை ஒப்படைக்கும் அரசாங்கம், நாளை நிகழப்போகும் ஒவ்வொரு அசம்பாவிதத்திற்கும் பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.
(வீடியோ இங்கே )