இன்றைய ராசிபலன் (25.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4news #L4
Prasu
1 hour ago
இன்றைய ராசிபலன் (25.04.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

பூர்வீக சொத்துக்களில் சில பிரச்சினைகளும், பாகப் பிரிவினையில் சில குளறுபடிகளும் நடக்க வாய்ப்புண்டு. கவனம் தேவை. தம்பதிகள் ஒற்றுமை காப்பர். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் அரசுத் தேர்வில் வெற்றி வாகை சூடுவர்.

ரிஷபம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சிற்சில அசௌகரியங்கள் உண்டாகும். இருப்பினும் அவற்றை சமாளித்து சுமூகமுடன் இருப்பீர்கள். பதவி உயர்வு உண்டாகும். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள் மாணவர்களுக்கு படிப்பில் முழுக் கவனம் தேவை.

மிதுனம்

கடன் கேட்ட இடத்தில் கால தாமதம் ஏற்பட்டு பிறகு கிடைக்கும்.வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். இனி நிம்மதி கிடைக்கும். சிலருக்கு உடல் நலம் தேறும்.

கடகம்

புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.

சிம்மம்

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வோ இடமாற்றமோ கிடைப்பது சற்று தாமதப்படும். வியாபாரிகள் கிளைகளை துவங்குவர். வேலை இல்லாதவர்களுக்கு தங்கள் கடின முயற்சியால் விரும்பிய வேலை கிடைக்கும். உடல் நிலை மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் இருக்கும். சுறுசுறுப்பு அவசியம்.

கன்னி

கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள். இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும். 

துலாம் 

இதனால் சகோதரர்களிடம் பகை உண்டாகும். ஆதலால் இந்தப் பிரச்சினைகளைப் பெரியோர் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மாணவர்கள் பலவீனமான பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

விருச்சிகம்

தம்பதியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு பெருகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள். வீட்டு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக செலவுகளும் வீண் விரயங்களும் உண்டாகும். 

தனுசு

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

மகரம் 

பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும். மேல் படிப்பு முயற்சி வெற்றி தரும். 

கும்பம் 

வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு ஆயத்தம் ஆவர்.உடல் நலம் சீராகும். 

மீனம் 

நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள்.பேச்சில் கவனம் தேவை. கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஈகோ நீங்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!