பிரித்தானியாவில் பாலியல் மோசடிகளுக்குள் சிக்கிக்கொள்ளும் இளம் ஆண்கள்
#Sex
#Lanka4
#England
#Youngster
#Scam
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் 20 வயதுகளில் உள்ள ஆண்கள் எளிதில் பாலியல் மோசடிகளுக்குள் சிக்கிக்கொள்வதாக புதிய பகுப்பாய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
பாலியல் மிரட்டல் என்பது, குற்றவாளிகள் ஒரு வெகுமதியை, பொதுவாக பணத்தை, வழங்காவிட்டால் தனிப்பட்ட பாலியல் படங்கள், வீடியோக்கள் அல்லது முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு மிரட்டி பணம் பறிக்கும் செயற்பாடாகும்.
சுமார் 50 வழக்குகளை ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் இருபது வயதுகளில் இருப்பதும், பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக இவ்வாறான மோசடியில் 13 முதல் 70 வரை இருப்பவர்கள் அதிகளவில் சிக்கிக்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பு ஏற்படுத்தி, அந்தரங்கப் படங்களைக் கேட்டு அழுத்தம் கொடுத்து, பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக அந்த பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே )