இலங்கை நிதி அமைச்சக நிதியில் இருந்து 2.5 மில்லியன் டாலர்கள் திருட்டு
இலங்கை நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பை சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்து 2.5 மில்லியன் டாலரைத் திருடியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டில், ஒரு அரச நிறுவனத்திலிருந்து ஹேக்கர்களால் திருடப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.
இலங்கை தனது 46 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, 2022ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு இந்த சைபர் தாக்குதல் ஒரு பெரும் பின்னடைவாகும்.
இந்தப் பணம் ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையாகும் என்று நிதி அமைச்சகச் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடுருவலுக்குப் பிறகு, பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் (PDMO) நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஹர்ஷனா சூரியப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )