யாழில் நடந்த சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் மரணம்

#SriLanka #Jaffna #Death #Accident #Lanka4 #Father #Son
Prasu
2 hours ago
யாழில் நடந்த சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் மரணம்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த பட்டா வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 மற்றும் 64 வயதுடைய தந்தையும் மகனும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஏழாலை கிழக்கைச் சேர்ந்த 64 வயது பரமேஸ்வரன் மற்றும் 23 வயது கஜதீபன் ஆவார்.

இருவரும் யாழ்ப்பாண நகரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து, பலாலி வீதியூடாக தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பட்டா ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!